சமந்தா- நாக சைதன்யா திருமணம் டிசம்பரில் நடைபெற வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாங்கள் காதலிப்பதை ஊர் உலகத்திற்கு தெரிவிக்காவிட்டாலும், சமந்தா- நாக சைதன்யா காதல் குறித்த செய்திகள் இல்லாமல் டோலிவுட் தினசரிகள் வெளியாவதில்லை.
நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா இன்னும் ஒருபடி மேலே சென்று, தங்கள் மகன்களின் காதல் தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று பகிரங்கமாக கூறி விட்டார். இந்நிலையில் டிசம்பர் மாதம் இருவரின் திருமணமும் நடைபெறலாம் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கான முன்னேற்பாடுகளில் இருவரின் குடும்பத்தாரும் இறங்கி விட்டனராம். சமந்தா-நாக சைதன்யா திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. சமந்தா கையில் தற்போது 'ஜனதா கேரேஜ்' என்ற ஒரு படம் மட்டுமே இருக்கிறது. வேறு புதிய படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. திருமண ஏற்பாடுகளால் 'வட சென்னை' படத்திலிருந்து கூட சமந்தா விலகி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதல் கைகூடினாலும் சமந்தா வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம் என்னவென்று விசாரித்தால் ஆளாளுக்கு போன் செய்து காதல் குறித்து விசாரிக்க ஆரம்பித்து விட்டார்களாம். காதல் கைகூடினாலும் தனது சொந்த வாழ்க்கை குறித்து பொது வாழ்வில் விவாதிப்பதை சமந்தா விரும்பவில்லையாம். இதுதான் அவரின் அப்செட்டிற்கு காரணம் என்று கூறுகின்றனர்.

No comments:
Post a Comment