நாடு நாடாகச் சுற்றும் மோடிக்கு இந்தியாவில் இருக்கும் ஒரே போட்டி எமி ஜாக்ஸன்தான். ஆமாம், எமி இந்தியாவில் இருக்கும் நாட்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு வெளிநாடுகளில் இருக்கும் எமி அப்படி சமீபத்தில் நடந்த கேன்ஸ் பட விழாவுக்கும் சென்றிருந்தார். அங்கேதான் காதலில் விழுந்திருக்கிறார். எமியை காதல் வலையில் வீழ்த்தியவர் ஃப்ரான்ஸின் பிரபல தொழிலதிபர் ஜீன் பெர்னார்ட். கேன்ஸ் முடிந்து ஒரு மாதம் ஆகியும் கூட இன்னமும் அவருடனேயே சுற்றி வருகிறார் எமி. இதனை படத்துடன் வெளியிட்டு அம்பலப்படுத்தியிருக்கிறது ஆங்கில முன்னணி நாளிதழான 'தி சன்'.
எமிக்கு இது கணக்கில் வந்த நான்காவது காதல். முதலில் ஹாலிவுட் நடிகர் ப்ரதீக் பாபர், அடுத்து பாக்ஸர் ஜோ சில்க்ரிக் ஆகியோருடன் டேட்டில் இருந்தவர் கடைசியாக 22 வயது நடிகரான ரியான் தாமஸுடன் ஆறு மாதகாலம் சேர்ந்து வாழ்ந்து பிரிந்தார். ஜீன் பெர்னார்டுக்கு இது இரண்டாவது காதல். பிரபல ஃப்ரான்ஸ் பாடகி செரில் கோலின் முன்னாள் கணவர்தான் ஜீன் பெர்னார்ட். எமி யார்கூட வேணாலும் சுத்துங்க... 2.ஓ வோட அடுத்த ஷெட்யூலை மிஸ் பண்ணிடாதீங்க...!
No comments:
Post a Comment