Find your luck based in your mole - Cine Cafe

cinema-cafe

The Full of Entertainment

Thursday, 25 January 2018

demo-image

Find your luck based in your mole

மச்சக்காரனா நீங்க... உங்களுக்கு லக் எப்படியிருக்கு பாருங்க பாய்ஸ்
aravind-samy-1516868780
அவனுக்கென்னப்பா மச்சக்காரன். எங்கேயே அதிர்ஷ்ட மச்சமிருக்கு அதான் அசால்டா எல்லாரையும் அசத்துறான் என்பார்கள். மச்சங்களினால் அதிர்ஷ்டம் கூடி வரும், சிலருக்கு கெட்டதும் நடக்கும். ஜோதிடத்தில் மச்ச சாஸ்திரம் பற்றி கூறப்பட்டுள்ளது. ரேகையைப் போலவே மச்சத்தை வைத்து பலன் சொல்லுவது ஆண்களுக்கும் பெண்களுக்கு சற்று வேறுபட்டே இருக்கும். இதை படிங்க: அடிவயிற்றில் மச்சம் இருக்கா? அப்ப ராஜயோகம் பாஸ்! #மச்சம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்ச பலன்கள் சற்று வேறுபட்டிருக்கும். பெண்களுக்கு இடது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும், ஆண்களுக்கு வலது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும் ஏற்படும். பெண்களின் மச்ச சாஸ்திரம் பற்றி ஏற்கனவே பார்த்து விட்டோம் என்பதால் ஆண்களுக்கான மச்ச பலன்களை தெரிந்து கொள்ளுங்கள். 

நீண்ட ஆயுள்
இரு புருவங்களுக்கு இடையே மச்சமிருந்தால் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். நெற்றியின் வலதுபுறம் இருந்தால் தனயோகமும் மனைவியால் யோகம் வரும். உண்டாகும். வலது நெற்றிப்பொட்டில் இருக்கும் மச்சத்தால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். 

அதிக செலவாளி 
வலது கண்ணில் மச்சம் உள்ளவர்களுக்கு, நண்பர்களால் உயர்வும் புகழும் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். இடதுபுருவத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வரும். அதிகம் செலவு செய்யக்கூடிய ஆளாக இருப்பீர்கள். 

அவமானம் வரும் 
மூக்கின் மேல் மச்சமிருந்தால் சுகபோக வாழ்க்கை வாழ்வீர்கள். மூக்கின் வலதுபுறம் இருக்கும் மச்சம் நீங்கள் நினைத்ததை அடையும் அம்சத்தை உங்களுக்குத் தரும். மூக்கின் இடதுபுறம் மச்சமிருந்தால் கூடா நட்பில் கூடித் திளைப்பீர்கள். பெண்களால் அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

சொக்க வைக்கும் ஆணழகன் 
மேல் மற்றும் கீழ் உதடுகளில் மச்சம் இருந்தால் எளிதில் காதல் வசப்படுவார்களாம். இடது மார்பில் மச்சம் இருப்பவர்கள் பெண்களை எளிதில் கவரும் ஆணழகர்களாக இருப்பார்கள். வலது மார்பில் மச்சம் இருந்தால் உங்கள் அன்பால் எல்லோரையும் சொக்க வைக்கு சொக்க வைக்கும் சுல்தானாக மாறுவீர்கள். 

உயர்பதவி 
உள்ளங்காலில் மச்சம் இருப்பவர்கள் மிகுந்த புகழ் உடையவர்களாக இருப்பார்கள். கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். சங்கீத்தில் ஈடுபாடு உடையவராக இருப்பார்கள். அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருப்பார்கள். அமைதியான வாழ்க்கையைப் பெற்றிருப்பார்கள். 

முதுகில் மச்சம்
முதுகுப் பகுதியில் மச்சம் கொண்டவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும். மன நிறைவுடனும் பக்தியுடனும் வாழ்க்கையை வாழ்பவர்கள். நல்ல சுற்றுச்சூழலில் வாழ்வார்கள். அனைவரிடமும் அன்போடு பழகக் கூடியவர்கள். பணச்சேர்க்கையில் தட்டுப்பாடே இருக்காது. உயர்வான வாழ்க்கையும் செல்வச் செழிப்பும் அதிகம் இருக்கும்.

No comments:

Post a Comment